தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கோவிலில் கொள்ளையிட்டவர்கள் பொலிஸாரால் கைது…..

யாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்களை நேற்று மாலை மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருநெல்வேலி பகுதியில் 2 ஆலயங்களிலும் 3 வீடுகளில் கடந்த இரு நாட்களில் 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

குறித்த கொள்ளைகளில் ஈடுபட்ட கொள்ளையர்களின் தெளிவான அடையாளங்களுடன் கூடிய சீ.சீ.ரி.வி ஆதாரங்கள் மீட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொள்ளையர்களை பிடிப்பதற்காக இளைஞர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் 4 பேர் நேற்று மாலை நடமாடியுள்ளனர்.

இதன்போது குறித்த நபர்களை மறித்த இளைஞர்கள் விசாரித்ததுடன் அவர்களிடம் இருந்த பையை சோதனையிட்டபோது கோவிலில் மீட்கப்பட்ட  பித்தளை பொருட்களை இளைஞர்கள் மீட்டுள்ளனர்.

அவர்களை  இளைஞர்கள்  முயற்சித்தபோது இருவர் தப்பி ஓடியுள்ள நிலையில்  மற்ற இருவரையும் நையபுடைத்த இளைஞர்கள் குறித்த நபர்களை மின் கம்பத்துடன் கட்டிவைத்த நிலையில் பொலிஸாரிடம் ஒப்படைகப்பட்டுள்ளனர்..

இதேவேளை  குறித்த கொள்ளையர்களை தாம் இதற்கு முன்னரும் கைது செய்ததாகவும்,

குறித்த நபர்கள் பிணையில் வந்து மீண்டும் மீண்டும் கொள்ளையில் ஈடுபடுவதாக பொலிஸார் கூறியுள்ளதாக தெரிவிகபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...