Designed by Iniyas LTD
குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்தவர்கள் விளக்கமறியலில்…
யாழ் ஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று பேரை எதிர் வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.டுள்ளது.
ஊரெழு மேற்கு சரஸ்வதி சனசமூக நிலைய பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் குடும்பப்பெண் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
வீட்டுக்குள் புகுந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று மகனைத் தாக்க முற்பட்ட வேளை அதனைத் தடுக்க முற்பட்ட தாயார் உயிரிழந்திருந்தார்.
இந்த சம்பவத்தில் 58 வயதான சந்திரராசா விஜயகுமாரி என்ற குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டதோடு அவரது மகன் காயமடைந்தார்.
இந்நிலையில் அந்தக் கொலையுடன் தொடர்புடைய மூவர் நேற்று முன் தினம் திங்கட்கிழமை மூவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்
சந்தேகநபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்ரையதினம் முற்படுத்தப்பட்ட போது. அவர்களை எதிர் வரும் வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மூவர் தொடர்பான தகவலை பொலிஸார் நீதிமன்றில் தெரிவிக்கவில்லை என கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.