Designed by Iniyas LTD
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து அறிந்திருக்கவில்லை – பிரதமர்
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து அமைச்சரவையோ தாமோ அறிந்திருக்கவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.அப்படி வந்த தகவல் குறித்து ஏன் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது பற்றி தனி விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதோடு தாக்குதல்களின் பின்னனியில் தீவிரவாதம் இருக்குமாயின் அந்த நாடுகளின் உதவிகள் பெறப்பட்டு அவை குறித்து விசாரிக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டின் பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதியின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது