Designed by Iniyas LTD
சட்டப்பேரவைத் தேர்தல் : ஜன.20 இல் இறுதி வாக்காளர் பட்டியல் – ராஜேஷ் லக்கானி
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு வரும் 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது. திருத்தங்களுக்குப் பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, வாக்கு இயந்திரங்களைத் தருவிப்பது உள்ளிட்ட முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
பொங்கல் பண்டிக்கைக்குப் பிறகோ, ஜனவரி மாத இறுதியிலோ தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகம் வந்து ஆய்வு மேற்கொள்வார்கள் எனவும் அவர் கூறினார். ஆய்வுக்குப் பின்னர் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடக்கும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வுகளைக் கருத்தில் கொண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார். சமூக வலைத்தளங்களில் வேட்பாளர்கள் மேற்கொள்ளும் பரப்புரைகளைக் கண்காணிக்க ஒரு பிரத்யேக மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.