Designed by Iniyas LTD
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் சரிவு!
ஈரான் – சவுதி அரேபியா பதற்றத்தால் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை தற்போது மீண்டும் சரிவுப் பாதைக்கு திரும்பியுள்ளது.
லண்டன் எண்ணெய் சந்தையில் brent வகை கச்சா எண்ணெய் விலை கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிந்தது. பிப்ரவரி மாத வினியோகத்துக்கான கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 34.83 டாலர் என்ற அளவை தொட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வினியோகம் அதிகரித்ததே விலை சரிவுக்கு காரணமாகும்.