Designed by Iniyas LTD
சட்டப்பேரவையில் வரும் 23ம் தேதி சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம்
தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் தமிழக பட்ஜெட்டை இன்று காலை தாக்கல் செய்தார். இதனையடுத்து வருகிற 20ஆம் தேதி வரை தமிழக சட்டப்பேரவையை ஒத்திவைத்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
இதன்பின்னர் சபாநாயகர் தனபால் சட்டபேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை வரும் திங்கள்கிழமை முதல் மார்ச் 24-ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடத்தப்படும்.
மேலும் பட்ஜெட் கூட்டதொடரின் கடைசி நாளான மார்ச் 24-ம் தேதி நிதி அமைச்சர் ஜெயக்குமாரின் பதிலுரை இடம்பெறும் என்று அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் வரும் 23-ஆம் தேதி சபாநாயகருக்கு எதிராக திமுக கோரிய நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற உள்ளது.