தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

டெங்குக் காய்ச்சலால் மேலும் ஒருவர் பலி!

article_1489637234-articleமட்டக்களப்பு, பாண்டிருப்பு  இரண்டாம் குறிச்சியைச் சேர்ந்த வள்ளியப்பன் நிலக்ஷன் (வயது (23) என்ற இளைஞர்,  டெங்குக் காய்ச்சல் காரணமாக புதன்கிழமை (15) மாலை உயிரிழந்துள்ளார். டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இவர், கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இவர் மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments
Loading...