Designed by Iniyas LTD
சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா அதிமுகாவில் இருந்து அதிரடி நீக்கம்
அதிமுக-வில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா நீக்கப்பட்டுள்ளார். அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற துக்ளக் ஆண்டுவிழாவில் பழ. கருப்பையா கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் கடுமையாக விமர்சித்தார். பொதுவாக அனைத்து கட்சி பொதுக்குழுக்களில் ஏகமனதாகவே தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்.
மந்திரிகள் கொள்ளையடிக்கிறார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை அவர் வெளிப்படையாக பேசினார். இந்நிலையில், பழ.கருப்பையா அதிமுக கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று நீக்கப்பட்டுள்ளார். பழ.கருப்பையா துறைமுகம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.