தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சட்டமா அதிபரை சந்திப்பதற்கு அலையும் ததேகூ

சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தீர்க்கமான முடிவொன்றை எட்டுவதற்காக சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரியவை சந்திப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரயத்தனம் செய்து வருகின்றது.tna

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகால தடைச்சட்டங்களில் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக வழக்கு விசாரணைகளின்றிறும், குற்றவியல் ஒப்பதல் வாக்குமூலம் பல வழக்குகள் தொடரப்பட்ட நிலையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஆட்சி மாற்றத்தின் பின்னரான காலப்பகுதியில் இரண்டு தடவைகள் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். முதற்தடவையாக முன்னெடுக்கப்பட்டபோது எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன உட்பட அரசாங்கத்தரப்பினர் முதற்கட்டமாக 32 கைதிகளுக்கு பிணையளிக்கப்படும், ஏனையவர்கள் படிப்படியாக விடுதலையளிக்கப்படுவார்களென வழங்கிய உறுதிமொழிக்கு அமைவாக கைவிடப்பட்டது.

அவ்வுறுதிமொழி நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் ஒருமாத கால இடைவெளியில் மீண்டும் உண்ணாவிரதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டபோது விசேட நீதிமன்றின் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு புனர்வாழ்வு பொறிமுயையூடாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர், சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், சட்டம் ஒழுங்கு அமைச்சர் சஹல ரட்நாயக்க, சட்டமா அதிபர் திணைக்கள தரப்புக்கள் ஆகிய தரப்புக்களுக்கிடையில் இணக்கம் ஏற்பட்டது.

இருப்பினும் அந்த இணக்கப்பாட்டின் பிரகாரமும் எவ்விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் மூன்றாவது தடவையாக தற்போது கடந்த திங்கட்கிமை முதல் அநுராதபுரம், மகசின் சிறைச்சாலைகளில் உள்ள நீண்டகாலமாக விசாரணைகளின்றியிருக்கும் அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அவ்வாறிருக்கையில் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் பிரகாரம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தாமதப்படுத்தப்பட்டமைக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகளே காரணமாக அமைந்திருந்தாக அரசாங்கத்தரப்பினர் குறிப்பிட்டிருந்தனர்.அத்துடன் புதிய சட்டமா அதிபர் நியமனத்தின் பின்னர் அவ்விடயத்திற்கு உரிய வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் நம்பிக்கை வெளியிட்டிருந்தனர்.

அவ்வாறான நிலையில் நேற்று முன்தினம் புதிய சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய தலைமையிலான குழுவினரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பதற்கு ஏற்பாடாகியிருந்தபோதும் தவிர்க்க முடியாத காரணத்தால் அச்சந்திப்பு நடைபெறவில்லை. இந்நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விரைவில் புதிய சட்டமா அதிபரைச் சந்திப்பதற்கு பிரயத்தனம் செய்துவருதாக தெரியவருவதோடு அதன்போது இப்பிரச்சினைக்கு தீர்மானதொரு முடிவு எடுக்கப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுவதாக கூட்டமைப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

Comments
Loading...