Designed by Iniyas LTD
சட்டவிரோத முறையில் பந்து வீசிய குற்றச்சாட்டில் மாட்டியுள்ளார் சுனில் நரைன்
இந்தியாவில் நடைபெற்று வரும் சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டித்தொடரின் போது, சட்டவிரோத முறையில் பந்து வீசிய குற்றச்சாட்டுக்கு மற்றொரு வீரர் இலக்காகியுள்ளார்.
மேற்கிந்திய தீவுகளின் வீரர் சுனில் நரைன் மீது இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் நான்காவது வீரராக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் நேற்று ஹைதாராபாத்தில் இடம்பெற்ற போட்டியில் கொல்கத்தை நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய சுனில் நரைன், டொல்பின்ஸ் அணிக்கு எதிரான பந்துவீச்சின் போது சட்டவிரோத பந்துவீச்சை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
ஏற்கனவே முகமது ஹபீஸ், அட்னான் ரசூல், பிரநீலன் சுப்ராயன் ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதேவேளை சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் நரைன் 11 விக்கெட்டுக்களை கைப்பற்றி தற்போதைய தொடரில் முன்னிலையில் உள்ளார்.