Designed by Iniyas LTD
சமகால அரசாங்கத்திற்கு சவால் விடும் வகையில் கூட்டு எதிரணி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்…
கொழும்பு நகரத்தின் செயற்பாடுகளை முடக்கி இலங்கை அரசாங்கத்துக்குச் சவால் விடும் வகையில் கூட்டு எதிரணி இன்று புதன்கிழமை(05) கொழும்பில் பாரிய மக்கள் பேரணியை நடாத்தவுள்ளது.
அமைதியான முறையில் தாம் இந்தப் பேரணியை நடத்தவுள்ளதாக கூட்டு எதிரணி தெரிவித்துள்ள போதிலும் அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் போன்ற முக்கியமான இடங்களை அவர்கள் முற்றுகையிட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது
மேலும் அவற்றின் செயற்பாடுகளை முடக்கும் இரகசியத் திட்டம் கூட்டு எதிரணியிடம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு பொலிஸார் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் எனவும் , சட்டத்தை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கபப்டுமெனவும் பொலிஸ்மா அதிபர் எச்சரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.