Designed by Iniyas LTD
சமஷ்டியை கைவிட்டாலே தமிழர்களுக்கு தீர்வு கிடைக்குமாம்? இனவாதக்கட்சி
இலங்கையில் ஒருபோதும் சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டுமாயின் முதலில் தமிழ் அரசியல் கட்சிகளும், குழுக்களும் தமது சமஷ்டி கோரிக்கையை கைவிட வேண்டும் என ஸ்ரீலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
தமிழர் தரப்பு கிடைக்காத ஒரு சமஷ்டி முறைமையினை எதிர்பார்த்து செயற்பட்டு வருகின்றது. எனினும் இலங்கையில் ஒருபோதும் சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை.
ஆகவே சமஷ்டியை உடனடியாக கைவிட்டு ஒன்றிணைந்து எதிர்கால ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப முன்வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதிகார பகிர்வு தொடர்பில் தமிழர் தரப்பு சர்வதேச பிரதிநிதிகளிடம் வலியுறுத்தி வரும் நிலையில் இது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாட்டை வினவிய போதே கட்சியின் பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.