தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

க்ளஸ்டர் குண்டுகள்(கொத்தணி) பயன்படுத்தியதை எவரும் விசாரிக்கப் போவதில்லை? இந்திய ஊடகம்

claserஇறுதி யுத்தத்தின் போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் துணை ராஜாங்க செயலாளர் நிஷா பீஸ்வால் உள்ளிட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையானது, இனியும் அமெரிக்கா சிறிலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தாது என்பதை புலனாக்கியுள்ளது.
சிறிலங்காவின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் செயற்பாடுகளை அதியுச்சமாக புகழ்ந்து இந்த அறிக்கை வெளியாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொத்தணி குண்டுகள் குறித்த விசாரணைக்கான அழுத்தங்களைக் கொடுக்க எந்த தரப்பும் முன்வரப்போவதில்லை.
எனவே இது குறித்த விசாரணைகள் இடம்பெறுதற்கான வாய்ப்புகள் இல்லை என்று அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

Comments
Loading...