தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சம்பந்தனை உடன் வெளியேற்ற வேண்டும்-வாசுதேவ நாணயக்கார…

மஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக  அறிவித்த பி ன்னரும், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தைப் பயன்படுத்தி வரும் சம்பந்தனை, வெளியேற்றவேண்டும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அவரை பொலிஸாரைப் பயன்படுத்தி வெளியேற்றவேண்டும் என்றும்  மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார  கூறியுள்ளார்.

சபாநாயகர்  கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் சுமுக நிலைமை ஏற்படுத்தவே மஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவராகச் சபாநாயகர் அறிவித்தாரா என எண்ணத் தோன்றுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் பதவி தொடர்பான நெருக்கடியின் போது சபாநாயகர் ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பாகச் செயற்பட்டதாகவும்  , இந்த நிலமையே தற்போதும் தொடர்கின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவ ராக மஹிந்த அறிவிக்கப்பட்ட பின்னரும், எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகம் கூட்டமைப்பு வசமே காணப்படுகின்றதாகவும்   சபாநாயகர் பொறுப்பற்றுச் செயற்படுகின்றதாகவும்  நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...