தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சம்பந்தன் தொடர்ந்தும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவராக செயற்படுவார்

கட்சியின் அடுத்த மாநாட்டின் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக அதன் தற்போதைய செயலாளர் மாவை சேனாதிராஜா நியமிக்கப்படுவார். இதனை ஆங்கில செய்தித்தாள் ஒன்று இன்று செய்தியாக வெளியிட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் தரப்புக்களை கோடிட்டு இந்த செய்தி வெளியாகியுள்ளது. தமிழரசுக் கட்சியின் மாநாடு செப்டம்பர் 6 முதல் 9 வரை வவுனியாவில் நடைபெறவுள்ளது.இதன்போது மாவை சேனாதிராஜாவை கட்சியின் தலைவராக்குவது தொடர்பில் பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.Mavai_Senathirajah

இந்த யோசனைக்கு கட்சியின் தற்போதைய தலைவர் ஆர் சம்பந்தனும் ஆதரவை வெளியிட்டுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. தகவல்களின்படி சம்பந்தன் தொடர்ந்தும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவராக செயற்படுவார். இதற்கிடையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் விரைவில் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்து கொள்ளும் இணக்கத்தை எட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...