Designed by Iniyas LTD
சம்மந்தனை விமர்சித்த ஊடகவியலாளர் பதவி விலகல்?
கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட செய்தி ஒன்று தொடர்பில் சுமந்திரனின் அழுத்தங்கள் காரணமாக தினக்குரல் பத்திரிகை பல்டியடித்து விவகாரத்தை தொடர்ந்து குறித்த செய்தியை அறிக்கையிட்ட ஊடகவியலாளர் தனது நிறுவனத்திலிருந்து பணி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்களிற்கு சான்றாதாரங்களை சமர்ப்பிக்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் தனது பதவி விலகல் கடிதத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவொன்றை மேற்கொண்டிருந்த கூட்டமைப்பு தலைவர் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் “2016 தீர்வு எனது கணிப்பு மட்டுமே சம்பந்தன் திடீர் குத்துக்கரணம்” என தலைப்பிட்டு கடந்த திங்கட்கிழமை தலைப்பு செய்தியொன்றை வெளியிட்டிருந்தது.
இந்நிலை நேற்று மறுப்பு செய்தியாக விசுவாசமாக எல்லோரும் செயற்பட்டால் இந்த வருட இறுதிக்குள் தீர்வு காணப்படும் என்பதே எனது கணிப்பு என்றே சொன்னதாக தினக்குரல் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் செய்தியில் பிரசுரத்திலே அதை எழுதிய செய்தியாளருடைய எண்ணக்கருத்துக்களுக்கும் விமர்சனங்களுக்கும் கூடுதல் இடமளித்திருப்பதை நாம் காணத்தவறமுடியாமல் உள்ளதென தனது ஊடகவியலாளர்களையே அது காட்டிக்கொடுத்துமிருந்தது.
இதனை தொடர்ந்தே சம்பந்தனின் செய்தியை அறிக்கையிட்ட ஊடகவியலாளர் தான் பணிவிலகுவதாக அறிவித்துள்ளதாக தெரியவருகின்றது. கொழும்பில் தலையாட்டுபவர்கள் போல தான் செய்தி அறிக்கையிட முடியாதென தெரிவித்துள்ள அவர் தன்வசம் சம்பந்தன் பத்திரிகையாளர் மாநாட்டில் சொன்னவற்றை ஒலிப்பதிவு சான்றாக சமர்ப்பிக்க தயாராக இருப்பதாகவும் சவால் விடுத்துள்ளார்.