தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தாயகம் திரும்பிய முன்னால் புலி உறுப்பினர் சிறிலங்காவில் கைது!

police-1-680x365வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய மற்றுமொரு விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியொருவர் ஸ்ரீலங்கா பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை கட்டுநாயக்க கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டிலிருந்து நாடுதிரும்பிய நிலையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் இந்த மாதத்தில் கைதுசெய்யப்படும் இரண்டாவது தமிழர் இவர்.
முல்லைத்தீவு – முத்தையன்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் ஜெயகாந்தன் என்பவரே கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 2013ஆம் ஆண்டு தொழிலின் நிமித்தம் மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்று கடந்த 12ஆம் திகதி நாடு திரும்பிய நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டார்.
பின்னர் மேலதிக விசாரணைக்காக கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு அலுவலகத்திற்கு சென்ற அவர் நேற்று பிற்பகல் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Comments
Loading...