தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சரத் பொன்சேகாவிடம் இருந்து பீல்ட் மார்ஷல் பட்டத்தை பறிக்க வேண்டும் – வாசுதேவ நாணயக்காரசரத் பொன்சேகாவிடம் இருந்து பீல்ட் மார்ஷல் பட்டத்தை பறிக்க வேண்டும் – வாசுதேவ நாணயக்கார

சரத் பொன்சேகாவிடம் இருந்து பீல்ட் மார்ஷல் பட்டத்தை பறித்து. அமைச்சரவையை விட்டு அவரை வெளியேற்ற வேண்டும் என்று கூட்டு எதிரணி வலியுறுத்தியுள்ளது.

கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,

‘முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக, பொருத்தமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்திய, பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகாவை அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

அவருக்கு வழங்கப்பட்ட பீல்ட் மார்ஷல் பட்டத்தையும் பறித்துக் கொள்ள வேண்டும்.

சரத் பொன்சேகாவை அமைச்சரவையில் பாதுகாக்கக் கூடாது’ என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Comments
Loading...