தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சர்வதேச நீதிபதிகளை கொண்ட விசாரணையே இருக்க வேண்டும்! இதில் இராணுவம் எக்காரணம் கொண்டும் தலையிட கூடாது! ஐ நா உறுதி

un-working-group-300x200மனிதவுரிமை மீறல்களை விசாரிக்க உருவாக்கப்படும் பொறுப்புக்கூறல் பொறிமுறை சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள்ம ற்றும் விசாரணையாளர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும், இந்த விசாரணை செயற்பாட்டில் இராணுவத்தினர் எக்காரணம் கொண்டும் தலையிடக் கூடாது என்றும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் பணிக்குழு அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்திருக்கிறது.

மீறல்களை விசாரிக்க உருவாக்கப்படும் பொறுப்புக்கூறல் பொறிமுறை சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும், இந்த விசாரணை செயற்பாட்டில் இராணுவத்தினர் எக்காரணம் கொண்டும் தலையிடக் கூடாது என்றும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் பணிக்குழு அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்திருக்கிறது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 9ம் திகதி முதல் 18ம் திகதிவரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்ந்திருந்த ஐ.நா. செயற்குழு தற்போது தமது அறிக்கையை இலங்கை அரசாங்கத்திற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும் முன்வைத்திருக்கிறது. ஐ.நா. செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கை மொத்தமாக 85 அம்சங்களை கொண்டுள்ளது. அதில் 77 முதல் 85 வரை பரிந்துரைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.

உடனடியாக பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச தரத் திற்குட்பட்ட சட்டமொன்றை அறிமுகப்படுத்தவேண்டும். பாதிக்கப்பட்டோரின் சங்கங்கள், சிவில் சமூக நிறுவனங்களுடன் இணைந்து உண்மை யைக்கண்டறியும் நிறுவனத்தை உருவாக்குங்கள். இந்த நிறுவனம் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதாக இருக்க வேண்டும். ஆட்கொணர்வு மனு முறைமை விடயத்தில் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அதிகாரங்களை வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படவேண்டும் எனவும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்வர்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் செயற்குழு பரிந்துரை செய்துள்ளது.

Comments
Loading...