Designed by Iniyas LTD
சவுதியில் வேலூர் பெண்ணின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம்: சுஷ்மா ஸ்வராஜ் கண்டனம்
வீட்டு வேலைக்காக சவுதி சென்ற வேலூர் பெண்ணின் கை வெட்டப்பட்ட சம்பவத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது போன்ற நிகழ்வுகளை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இச்சம்பவம் சவுதி அரேபிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என சுஷ்மா உறுதியளித்துள்ளார். மேலும், மிகவும் கொடூரமான வகையில் கை துண்டிக்கப்பட்ட நிகழ்வு தன்னை மிகவும் பாதித்ததாகவும், பாதிக்கப்பட்டவரை இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டதாகவும் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் கொலை முயற்சி வழக்கு தொடர வேண்டும் என்றும் தன்னிச்சையான அமைப்பு ஒன்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் சவுதி அரேபிய அதிகாரிகளை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
வேலூரில் இருந்து சவுதி அரேபியத் தலைநகர் ரியாத்திற்கு வீட்டு வேலைக்காக சென்ற 55 வயதான கஸ்தூரி முனிரத்தினம் என்ற பெண், கொடுமைப்படுத்தப்பட்டு வலது கைது வெட்டப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.