Designed by Iniyas LTD
சவுதி அரேபியாவில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 48 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது
நடப்பு ஆண்டில் சவுதி அரேபியாவில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 48 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் பாதிப்பேர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இத்தகவலை மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
அதில், சவுதிஅரேபியாவில் குற்ற வழக்குகளில் விசாரணை நடைமுறை மிகவும் கவலை அளிக்கிறது.
சவுதிஅரேபியாவில் அதிக எண்ணிக்கையில் மரண தண்டனை நிறைவேற்றுவது நல்லதல்ல என்றும், போதை பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதை குறைக்க நீதித்துறை நடைமுறைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் மனித உரிமை கண்காணிப்பு கூறியுள்ளது.
சவுதி அரேபியாவின் இளவரசர்
இந்நிலையில் சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் சமீபத்தில் ‘டைம்‘ பத்திரிகைக்கு பேட்டி அளித்தபோது, கொலை வழக்கை தவிர மற்ற குற்ற வழக்குகளில் மரண தண்டனைக்கு பதில் ஆயுள் தண்டனையாக குறைப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை சவுதியில் கடந்த ஆண்டில் மட்டும் 150 பேரின் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.