தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மரண தண்டனை நிறைவேற்ற முடியாது என ஐநா புதிய வரைவு நிறைவேற்றம் –

அநேக நாடுகளில் குற்றவாளிகளிற்கு   உச்ச கட்ட தண்டனையாக மரண தண்டனை வழங்கப்படுகிறது.

இந்த மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கை உலகளவில் ஓங்கி ஒலித்து வருகிறது.

இந்நிலையில் ஐ.நா. பொதுச்சபையின், 3–வது குழுவில் மரண தண்டனையை ஒழித்துக்கட்டும் வகையில், அந்த தண்டனைகளை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்க கோரும சட்ட  வரைவு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

குறித்த  தீர்மானத்தின் மீது நேற்று முன்தினம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டபோது,  தீர்மானத்துக்கு ஆதரவாக 123 ஓட்டுகளும், எதிராக 36 ஓட்டுகளும் கிடைத்துள்ளன.

இதனால் சர்வதேச நாடுகளின் கூட்டமைப்பின் மூலம் உலகம் முழுவதும் மரணதண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  30 நாடுகள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...