Designed by Iniyas LTD
சிங்கப்பூரில் வேகமான பரவி வரும் ஜிகா வைரஸ்
சிங்கப்பூரில் தற்போது ஜிகா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அங்கு ஏற்கனவே 189 பேருக்கு ஜிகா வைரஸ் காய்ச்சல் உள்ளது. இவர்களில் 13 பேர் இந்தியர்கள் ஆவர். இந்த நிலையில் சிங்கப்பூரில் புதிதாக 26 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவர்களில் 2 பேர் இந்தியர்கள். இதையடுத்து சிங்கப்பூரில் ஜிகா வைரஸ் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 15 பேர் இந்தியர்கள் ஆவர். சிங்கப்பூரில் 15 இந்தியர்கள் ஜிகா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதை அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஜிகா வைரஸ் பரவிய பகுதிகளில் அதை பரப்பும் ஏடிஸ் கொசுவை ஒழிக்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஜிகா வைரஸ் அறிகுறிகள் தென்படுபவர்கள் அவர்களுக்கு அந்த நோய் உள்ளதா என்பதை உறுதி செய்யும் வகையில் தொற்று நோய் தடுப்பு மையத்தில் தனிமைப்படுத்தப் படுகிறார்கள். ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.