தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நைஜர் நாட்டின் கிழக்கு பகுதியில் போகோஹரம் இயக்கத்தினர் தாக்குதல்

நைஜீரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற போகோஹரம் பயங்கரவாத இயக்கத்தினர், அண்டை நாடான நைஜரிலும் கால் பதித்துள்ளனர்.Boko-Haram

இவ்விரு நாடுகளிலும் அவர்கள் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் நைஜர் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள டவுமர் என்ற கிராமத்திற்குள் அந்த இயக்கத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை புகுந்து தாக்குதல்கள் நடத்தினர். அப்பாவி மக்களை வீடுகளில் இருந்து வெளியே இழுத்து வந்து வில், அம்புகளைக் கொண்டு தாக்கினர். இதில் 5 பேர் உயிரிழந்தனர்.

அதைத் தொடர்ந்து அங்கு பல வீடுகளை தீயிட்டுக்கொளுத்தி விட்டு அவர்கள் தப்பினர். இது தொடர்பான தகவல்கள் நேற்றுதான் கசிந்தன.  நைஜர் நாட்டின் கிழக்கு பகுதியில் போகோஹரம் இயக்கத்தினர் தாக்குதல் நடத்தி இருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

Comments
Loading...