தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிங்கள அகதிப் பெண்களுக்கு வழங்கப்பட்ட மார்புக் கச்சைக்குள் போதை மருந்துகள்?

மீதொட்டமுல்ல குப்பை மலை சரிந்ததில், வீடுகளை இழந்த நிலையில் முகாம்களில் தங்கியுள்ள சிங்கள அகதி யுவதிகள் மற்றும் சிறுமிகளுக்கென, இலவசமாக விநியோகிக்கப்பட்ட மார்புக் கச்சைகளுக்குள், ஜெல் பெக்கெட்டுகளும் மாத்திரைகளும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மீதொட்டமுல்ல நெற்களஞ்சியசாலையில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ள சிறுமிகள் மற்றும் யுவதிகளின் பாவனைக்கு மாத்திரமே என்று கூறப்பட்ட நிலையிலேயே, மேற்படி மார்புக் கச்சைகள் விநியோகிக்கப்பட்டதாக, அவர்களின் தாய்மார் தெரிவிக்கின்றனர். இந்த மாத்திரைகள் மற்றும் ஜெல் அடங்கிய பெக்கெட்டுகள், மிகவும் சூட்சுமமான முறையில், மேற்படி மார்புக் கச்சைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டு சுற்றிவர தைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்த அந்தத் தாய்மார்கள், இந்த மாத்திரைகள் மற்றும் ஜெல்கள் எதற்காகப் பயன்படுத்துபவை போன்ற விவரங்கள் தங்களுக்குத் தெரியாதென்றும் தெரிவிக்கின்றனர்.

Comments
Loading...