Designed by Iniyas LTD
சிங்கள ஆக்கிரமிப்பின் சின்னமாக மாறும் முல்லைத்தீவு – மக்கள் விசனம்
முல்லைத்தீவு மாவட்டம் வடக்கு மாகாணத்தில் ஆக்கிரம்பின் இடமாக மாற்றம் பெற்றுள்ளது. வடக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரிக்கும் சிங்கள இனத்தவர்களின் நிகழ்ச்சி திட்டம் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்தின் நிகழ்சி நிரலுக்கு இசைவாக செயற்பட்டு கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

தமிழர்களின் விடுதலை உணர்வினை தூண்டும் வகையில் மேடைப்பேச்சுக்களில் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் வாதிகளும் போரால் பாதிக்கப்ப்ட மக்களுக்கு என்ன செய்தார்கள என்பது இன்னும் வடக்கு கிழக்கு பகுதிகளில் கேள்விக்குறியாகவே உள்ளது. இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக நில ஆக்கிரமிப்பு,மதஆக்கிரமிப்பு,காணாமல் போனவர்கள்,அத்துமீறும் கடற்தொழில் நடவடிக்கை என்று தொடர்ந்து செல்லும் மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது.

இவ்வாறன நிலையில் சிங்கள இனவெறிபிடித்தவர்கள் தமிழர்களின் பூர்வீகங்களை இல்லாம் செய்யும் நடவடிக்கை தொடர்ந்துகொண்டே செல்கின்றது இதற்காகவ மக்கள் வாக்கு போட்டு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என தெரிவு செய்தார்கள் என்ற குமுறலில் மக்கள் காணப்படுகின்றார்கள். இந்த நிலை தொடருமா மாறுமா என்ற அச்சத்தில் எல்லைக்கிராமங்களில் வாழ்கின்ற மக்கள் இன்னும் அச்சஉணர்வுடன் வாழ்ந்து வருகின்றார்கள்.

