தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிங்கள மக்களுக்கு புத்தாண்டு! தமிழர்களுக்கு கரி நாள்

keppa-01இன்றை தினமான புதுவருடத்தை கறுப்பு கொடிகள் ஏற்றி துக்கதினமாக அனுஸ்டிக்கவுள்ளதாக வடக்கில் நிலவிடுவிப்பிற்காகவும் ,காணாமல் போனோருக்கு நீதி கோரியும் போராடிவரும் மக்கள் அறிவித்திருந்ததுடன் அதனை அமுல்படுத்தியுமுள்ளனர்.மக்களின் போராட்டங்கள் மாதக்கணக்கில் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நிலையில் தெருவோரங்களில் அநாதைகளாக விடப்பட்டுள்ள தாம் சித்திரை வருடப்பிற ப்பை கறுப்பு தினமாக அனுஸ்டிக்கவுள்ளதாக அறிவித்திருந்தனர்.
அவ்வகையினில் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவில் அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு இராணுவத் தலைமையகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் இன்றைய தினம் கறுப்பு சித்திரைப் புத்தாண்டு தினமாக அனுஸ்டித்துள்ளனர்.
கறுப்பு உடைகள் அணிந்து, இராணுவ தலைமையகத்தை நோக்கி தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் எனப் பலதரப்பட்டவர்களும் கறுப்புடை அணிந்தும் கைகளினில் கறுப்பு கொடிகளை தாங்கியவாறும் கறுப்பு சித்திரைப் புத்தாண்டை அனுஸ்டித்துள்ளனர்.அத்துடன் மரணகிரியைகளை நினைவுபடுத்தும் தோரணங்களும் தொங்கவிடப்பட்டிருந்தது.

kili-1
இதனிடையே சிவில் உடையினில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை படையினர் வருகை தந்து சந்தித்து புத்தாண்டுவாழ்த்து தெரிவித்தனர்.அப்போதும் தமது காணிகளை விட்டு வெளியேறினால் மட்டுமே புத்தாண்டென அவர்கள் படையினரிடம் தெரிவித்தனர்.
இதனிடையே காணாமல் போன தமது உறவுகளை தேடிபோராட்டத்தினில் ஈடுபட்டுள்ளோரும் கறுப்பு ஆடைகளை அணிந்து புத்தாண்டை கரிநாளாக அனுஸ்டித்துக்கொண்டிருக்கின்றனர்.

4

Comments
Loading...