தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிரியாவில் அப்பாவி மக்கள் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல்: பலர் உயிரிழப்பு

amnesty-russian-air-strikesசிரியாவில் ரஷ்யப்படையினர் நடத்தி வரும் வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி முதல் நவம்பர் 29ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில் ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் குறிப்பிட்ட 25 குறித்து ஆய்வுகளை மேற்கொண்டதில் இது தெரிய வந்துள்ளதாக சர்வதேச பொது மன்னிப்பு சபை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 சிரியாவின் ஹோம்ஸ், ஹமா, இட்லிப்,லடாக்கியா மற்றும் அலெப்போ ஆகிய இடங்களி்ல் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்தும், அப்பகுதி மக்களிடம் நடத்திய விசாரணையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது தெரிய வந்ததாகவும் அம்னெஸ்டி கூறியுள்ளது.

 அப்பகுதிகளில் பயங்கரவாதிகளின் முகாம்கள் இல்லாத நிலையில், தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, மனித உரிமை ஆர்வலர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

Comments
Loading...