Designed by Iniyas LTD
திமுக கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும்: கருணாநிதி அழைப்பு
திமுக கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி விருப்பம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசனைக்கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் நலக் கூட்டணியினர், விஜயகாந்த்தை நேரில் சந்தித்தது பற்றி கருத்து கூற விரும்பவில்லை என்றார்.
மேலும் சென்னையை அடுத்த திருநின்றவூரில் மழை நீர் தேங்கியது தொடர்பாக அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியது பொய் என்று கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.