Designed by Iniyas LTD
சிரியாவில் பாரிய மனிதப்புதைகுழி !
சிரிய படையினர், ஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற் றிய பண்டைய நகரான பல்மைராவிலிருந்து சுமார் 42 சடலங்களைக் கொண்ட பாரிய மனிதப் புதை குழியொன்றை சனிக்கிழமை கண்டுபிடித் துள்ளனர்.
வட கிழக்கு நகரான மேற்படி பிராந்தியத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட அந்தச் சடலங்களில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களது சடலங்கள் உள்ளடங்குகின்றன.
அவர்களில் சிலர் தலை துண்டிக்கப்பட்டும் சிலர் துப்பாக்கியால் சுடப்பட்டும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த சடலங்கள் மாகாண தலைநகரான ஹொம்ஸிலுள்ள இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அவற்றில் சில சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
படையினர், அரசாங்க ஆதரவு போராளிகள் மற்றும் அவர்களது உறவினர்களே இவ்வாறு கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்மைரா நகரைக் கைப்பற்றிய வேளை ஐ.எஸ். தீவிரவாதிகளால் குறைந்தது 280 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம் கூறுகிறது.
அத்துடன் அந்நகரிலான தீவிரவாதிகளின் 10 மாத ஆக்கிரமிப்பின் போது, அங்குள்ள பண்டைய கலாசார முக்கியத்துவம் மிக்க கட்டமைப்புகளுக்கும் கடும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிரிய அலெப்போ பிராந்தி யத்தில் தெற்கே கிளர்ச்சியாளர்களுக்கும் அரசாங்கப் படையினருக்குமிடையே மோதல் கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.