Designed by Iniyas LTD
சிறார் நீதி திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு
அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சிறார் நீதி திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த வழக்கில் 17 வயது நிரம்பிய சிறுவன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அ
தில்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி நிர்பயா என்பவர் ஓடும் பேருந்தில் இரவு நேரத்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களில் ஒருவருக்கு அப்போது 17 வயதே ஆகியிருந்ததால், சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அவரை 3 ஆண்டுகள் கண்காணிப்பில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டது. இவ்வாறு குறைந்தபட்ச தண்டனை மட்டும் வழங்கப்பட்டதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், கொடிய குற்றங்களில் ஈடுபடும் சிறார்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையில், அவர்களின் வயது வரம்பை 18-லிருந்து 16ஆகக் குறைப்பது உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிலுவையில் இருந்த இதுதொடர்பான சட்டத் திருத்த மசோதா, அண்மையில் நிறைவடைந்த குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கியதையடுத்து இச்சட்டம் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இதன்படி பாலியல் பலாத்காரம் போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபடும் 16 வயது நிரம்பிய சிறார்களுக்கு இனி கடும் தண்டனை கிடைக்கும். மேலும், சாதாரண குற்றங்களில் ஈடுபடும் குழந்தைகள் 21 வயதுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டால், அவர்கள் பெரியவர்களுக்கான சட்டத்தின்படியே தண்டிக்கப்படுவார்கள்.
இந்நிலையில் இந்தச் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் பிரமுகரும் சமூகவிலயாளருமான தக்க்ஷீன் பூனவாலா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தக்கால் செய்துள்ளார்.
அதில், அரசியல் சாசனத்தின் 14வது பிரிவு வழங்கியுள்ள (அனைவரும் சமம்) உரிமைக்கு எதிராக உள்ளது. மேலும், 1800 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பில் நிறைவேற்றப்பட்ட ‘குழந்தைகளுக்கான உரிமை’ சாசனத்துக்கு எதிராகவும் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.