தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர் மீது துப்பாக்கிச் சூடு

amu-mஅலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயிலும் மாணவர் ஒருவர் மீது இன்று துப்பாக்கியால் சுடப்பட்டார்.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வருபவர் முகம்மது காலித். இவர் இன்று காலை, பல்கலைக்கழகத்தின் சிறுபான்மையினர் அந்தஸ்து குறித்து மாணவர்களிடம் விவாதித்துவிட்டு தனது விடுதி அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், முகம்மதுவை துப்பாக்கியல் சுட்டனர். மேலும், பயங்கரமான ஆயுதங்களாலும் அவரைத் தாக்கினர். உடனடியாக அவர் ஜவர்ஹலால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலை கவலைக்கிடமாகவே உள்ளது.

இதுகுறித்து சிவில்லைன் போலீஸார் வழக்கப் பதிவு செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையில் அலிகார் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சிலர் பெயரும் இடம் பெற்றுள்ளது.

மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள தனிப்பட்ட பிரச்னை காரணமாகவே இத்தாக்குதல் நடைபெற்றுள்ளதாக பல்கலைக்கழக ஊடகத் தொடர்பாளர் கூறினார்.

Comments
Loading...