Designed by Iniyas LTD
சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்தவுள்ளது -பெற்றோலியக் கூட்டுத்தாபனம்.
இலங்கையின் தேசிய விமான சேவையான சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்கான எரிபொருள் விநியோகத்தை எதிர்வரும் புதன்கிழமையுடன் நிறுத்தவுள்ளதாகப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எச்சரித்துள்ளது.
தமக்குச் செலுத்த வேண்டிய சுமார் 14 பில்லியன் ரூபாவில் குறைந்தபட்சம் 1 பில்லியன் ரூபாவை குறித்த காலக்கெடுவுக்குள் வழங்கத் தவறினால் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படுமென இலங்கையின் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான முடிவைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இலங்கையின் சிவில் விமான, போக்குவரத்து அமைச்சு இலங்கை ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றுக்கும் அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இந்த முடிவினால் விமான சேவைகள் நிறுத்தப்படும் ஆபத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு இலங்கையின் விமான சேவை 14 பில்லியன் ரூபாவையும், மின்சார சபை 46 பில்லியன் ரூபாவையும் செலுத்த வேண்டிய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

