தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிறிலங்காவில் சீன நிறுவன உதவியோடு மீண்டும் உருவாகும் போர்ட் சிட்டி!

Phase-I-of-Colombo-Port-City-Project-Starts-Next-Monthசீன நிறுவனம் இணங்கினால் போட்சிட்டி நிர்மாணத்தை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக ஸ்ரீலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை இதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த திட்டத்தை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கீழ் வரும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் கொண்டு வருவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும்,  இந்த திட்டம் தொடர்பில் சீன நிறுவனம் வழங்காதிருந்த சுற்றாடல் தொடர்பான அறிக்கை தற்போது வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கமும் இது தொடர்பான சர்வதேச களஆய்வை ஏற்கனவே பெற்றிருக்கிறது.இதேவேளை தற்போது குறித்த காணிக்கான உரிமை சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளமையானது மாற்றப்பட்டு அந்த உரிமை ஸ்ரீலங்கா அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
99 வருட குத்தகை அடிப்படையில் இந்த திட்டம் தொடர்பில் உடன்படிக்கை முன்னைய அரசாங்கத்தினால் செய்துக்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி 108 ஹெக்டேயர் காணிப்பரப்பின் உரிமையை சீன நிறுவனம் கொண்டிருக்கும்.125 ஹெக்டயர் நிலத்தின் உரிமைகளை ஸ்ரீலங்கா அரசு கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Comments
Loading...