Designed by Iniyas LTD
சிறிலங்காவில் சுதந்திரமில்லாத சுதந்திர தினம்
இன்றைய தினம் சிறிலங்காவில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. ஆனாலும் இந்த நிகழ்வானது வளமையமைப்போல களைகட்டவில்லை என்பது சிறிலங்கா அரசாங்கத்துக்கு பெரிய இழப்பாகும். முன்னைய காலங்களில் சுதந்திர தினத்தை கட்டாயமாக கொண்டாட வற்புறுத்தும் சிறிலங்கா அரசு இம்முறை தமிழர்கள் எவரையும் அவ்வாறு கட்டுப்படுத்த வில்லை.
காரணம் ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு போடப்படவுள்ள முடிச்சின் பயத்தின் காரணமாகவே இம்முறை பெரிய எடுப்பில் ஈழத்தில் சிங்கள கூலிப்படைகளால் தமிழ் மக்களை வற்புறுத்த முடியவில்லை. இன்றைய தினம் சிறிலங்கா இராணுவத்தினர் பெரும் எடுப்பில் வாகனங்களில் சுற்றி திரிந்தனர், ஆனாலும் இந்த சுதந்திர நாளில் கூட தமிழர்களை சிங்கள இராணுவம் சுதந்திரமாக உலாவித்திரிய அனுமதிக்கவில்லை.
ஆனையிறவில் அமைந்துள்ள காவலரணிலும், ஓமந்தை காவலரணிலும் கூட சிங்களப்படைகள் தமிழர்களின் மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள் ,பேருந்துகள் போன்ற வாகனங்களை வழிமறித்து பதிவு செய்த பின்னரே பயணத்துக்கு அனுமதியளித்துள்ளார்கள். இதன்மூலம் சிறிலங்கா இராணுவம் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் ஒருபோதும் வழங்கமாட்டோம் என்பதனை மீண்டும் ஒருமுறை நிருபித்து காட்டியுள்ளது.
இன்று வழமைக்கு மாறாக எல்லா பொது இடங்களிலும் சிங்கக்கொடி ஏற்றவேண்டும் என்று கோத்தபாய கட்டளை இட்டபோதிலும் மக்கள் பெரிதாக பொருட்படுத்தியதாக தெரியவில்லை.
இருந்தாலும் சில பேருந்துகளில் சிங்க கொடிகள் பறந்ததை காண முடிந்தது. இவ்வாறு காணப்பட்ட பேருந்துகளில் மக்கள் குறைவாக ஏறியே பிரயாணம் செய்ததையும் அவதானிக்க முடிந்தது.