தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிறிலங்கா இராணுவத்தினர் கட்டைகளால் அடித்துக் கலைத்தது ! – கணவன் சாட்சியம்

 Evening-Tamil-News-Paper_41649591923சிறிலங்கா இராணுவத்தினர் கட்டைகளால் அடித்துக் கலைத்தது ! – கணவன் சாட்சியம் 

மனைவியை எங்களுடனேயே கூட்டிச் செல்கின்றோம் அவரை விடுங்கள் என கேட்கும் போது எங்களுக்கு அடிக்க இராணுவத்தினரிடம் கட்டை கொண்டு கலைத்தது என தனது மனைவியை காணாது ஆணைக்குழுவிற்கு சாட்சியமளிக்க வந்த கணவர் ஒருவர் சாட்சியமளித்தார்.

காணாமல் போனவர்களைக் கண்டறியும் சிறிலங்கா ஜனாதிபதி ஆணைக்குழுவின்  விசாரணை முல்லைத்தீவு மாவட்டத்தில் பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. அதன்  போது சாட்சியமளிக்க வந்திருந்த ஒருவரே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் சாட்சியமளிக்கையில், இறுதிக் கட்டயுத்தத்தில் எனது மனைவி எறிகணையில் காயப்பட்டுவிட்டார். அவரையும் தூக்கிக் கொண்டுதான் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு சென்றோம். அப்போது மனைவியை தூக்கி பஸ்சில் ஏற்றிவிட்டு எங்களை வேறுவழியால் செல்லுமாறு கூறினர் அப்போது நாங்கள்  மனைவியை எம்முடன் அனுப்பி வைக்குமாறு இராணுவத்தினரைக்  கேட்டோம். அந்தவேளை இராணுவம் எங்களை கட்டைகளால்  அடித்துக் கலைத்தது. அதுக்குப் பிறகு எதுவும் எங்களுக்கு என்  மனைவி குறித்து தெரியாது. எல்லா வைத்தியசாலையிலும் தேடினோம் ஆனால் எங்கும் அவர் இல்லை என்று அவர் மேலும் சாட்சியமளித்தார்.

Comments
Loading...