தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிறிலங்கா தேயிலை ஏற்றுமதி வீழ்ச்சி

இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுக்கான தேயிலை ஏற்றுமதி வருமானம் சுமார் பத்து வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இந்த புள்ளி விபரத் தகவல்களை வெளியிட்டுள்ளது.srilanka-tea-eastate

கடந்த ஆண்டு முதல் இரண்டு மாத காலப்பகுதியில் தேயிலை ஏற்றுமதி மூலம் 221.9 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டது. இந்த ஆண்டில் அந்தத் தொகை 200.4 அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது. சர்வதேச சந்தையில் விலை வீழ்ச்சி மற்றும் கேள்விக் குறைவடைதல் ஆகிய காரணிகளினால் இவ்வாறு வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் வர்த்தக ஆய்வு பிரிவு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

Comments
Loading...