Designed by Iniyas LTD
நீதி பெறு தமிழினமே! த.செல்வா
ஐ நா வின் வாசலில்
விழித்துக் கொண்டன
மனித உரிமை பற்றிய
பேச்சுக்கள் .
தமிழ்த் தலைமகளோ
ஒழித்துக் கொண்டனர்
இனப் படுகொலையை
மறைப்பதற்காய்
ஈழப் படுகொலை பற்றி
ஐ நா வில் குறித்துக்கொள்ள
யார் செல்வார்
உலக நீதி கோரி
ஐ நா வின் முன்றலில்
யார் உரைப்பார்
கூட்டுச்சதியில்
சிங்களவர் வெற்றியில்
கொடி பிடிப்பதை
யார் நிறுத்துவார்
ஈழத் தமிழனுக்கு
உரிமை இல்லையா
உரிமை பெற
அவன் மனிதன் இல்லையா
சர்வதேச நீதியின் முன்
சர்வாதிகாரம் வாழுமா
இனப் படுகொலை
ஐ நா வில் மூழ்கடிக்கப்படுமா
தமிழ் இனமே விழித்துக்கொள்
உன்னைக் கொன்றவர்களை
ஐ நா வில் நிறுத்து
நீதியை கேட்பது
உனதுஉரிமை கூட.
0
த.செல்வா
