தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிறுமிகளை வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் ஏழு கடற்படை வீரர்கள் கைது

யாழ்ப்பாணம் காரைநகர் ஊரி கிராமத்தில் இரண்டு சிறுமிகளை வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் ஏழு கடற்படை வீரர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.arrest

11 வயது மற்றும் 9 வயது சிறுமிகளே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் .வல்லுறவு மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கடற்படை வீரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று மாலை குறித்த கடற்படை வீரர்கள் அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில் கைதான 7 கடற்படை வீரர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் பாடசாலைக்குச் சென்ற போது, அவரைத் தடுத்து வைத்து தொடர்ச்சியாக பதினொரு நாட்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Comments
Loading...