Designed by Iniyas LTD
மகிந்த குடும்பத்தால் உப்புல் ஜயசூரியவிற்கு கொலை மிரட்டல்
ராஜபக்ஷ குடும்பத்தாருக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டமைக்காக, ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உப்புல் ஜயசூரியவிற்கு விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தலின் பின்னணியின் ராஜபக்ஷ குடும்பத்துக்கு சார்பான இராணுவத்தினர் சம்பந்தப்பட்டுள்ளனர்.ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
அளுத்கம தாக்குதல் சம்பவம், வடமாகாண ஆளுநர் நியமனம் போன்ற விடயங்களில் ராஜபக்ஷ குடும்பத்தாருக்கு உள்ள சாதக நிலைமைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் அண்மைக்காலமாக அவர் கருத்துக்களை வெளியிட்டு வந்ததுடன் அதற்கு கண்டனத்தையும் தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் தமக்கு கொலை அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், தம்மை இருவர் பின்தொடர்வதாகவும் அவர் காவற்துறை நிலையத்தில் முறைபாடு செய்திருந்தார்.எவ்வாறாயினும் இந்த அச்சுறுத்தலின் பின்னணியில் இராணுவத்தினரே சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.