Designed by Iniyas LTD
சிறுவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவேண்டும் – யுனிசெப் இலங்கைக்கான பிரதிநிதி வலியுறுத்தல்…
இலங்கையில் சிறுவர்களை வன்முறைகள் மற்றும் துஸ்பிரயோகங்களில் இருந்து பாதுகாப்பதற்குரிய கொள்கைகளை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வலியுறுத்தலை யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி திம் சட்டன் விடுத்துள்ளார்.
அதோடு சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தேசிய வேலைத்திட்டம் ஒன்றை ஸ்ரீலங்கா வகுக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
அதில் இணையத்தளத்தில் இருந்து சிறார்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதி திம் சட்டன் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.