Designed by Iniyas LTD
சிறுவர் நாளை முன்னிட்டு முன்பள்ளிச் சிறார்களுக்கு புலம்பெயர் உறவால் கற்றல் கருவிகள்கையளிப்பு…
அன்னை ஈசுவராம்பா முன்பள்ளி, இளநிலா முன்பள்ளி, சரசுவதி முன்பள்ளி ஆகிய மூன்று முன்பள்ளிகள் உள்வாங்கப்பட்டு இவ்வுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இந் நிகழ்வானது 01.10.2018 இன்றைய நாள்காலை 09.30மணியளவில் இடம்பெற்றுள்ளது.
புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் திரு.திலீபன் – கந்தப்பிள்ளை அவர்களால் இவ்வுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன் அவர்கள் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா – லோகேசுவரன் ஆகியோர் கற்றல் கருவிகளை சிறார்களுக்கு வழங்கிவைத்தனர்.
மேலும் இந் நிகழ்வில் மிசுபா செப மிசனரி ஆலய போதகர் சவரிமுத்து – யோன்சன்சதீசுக்குமார் அவர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள்,சிறார்கள் என பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



