தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிரியங்க பெர்னான்டோவுக்கெதிரான வழக்கை மீள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு..

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கெதிரான வழக்கை எதிர்வரும் மே 7 ஆம் திகதி மீள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரித்தானிய நீதிமன்ற ஊழியர்கள் இவ்வழக்கை முன்னிலைப்படுத்துவதில் தவறிழைத்துள்ளதாக தெரிவித்ததன் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கை    பிரதம மஜிஸ்ட்ரேட் எம்மா ஆர்புத்நொட் (Emma Arbuthnot )  மீள் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில்  லண்டனில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது, புலம்பெயர் தமிழர்களை கழுத்து அறுத்து கொலை செய்வதாக சைகை மூலம் காண்பித்திருந்த விவகாரத்தில் கடந்த ஜனவரி மாதம் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியாக பிரித்தானிய நீதிமன்றத்தால் இனங்காணப்பட்டார்.

பிரித்தானிய பொது ஒழுங்கு சட்டத்தின் கீழ் துன்புறுத்தல் எனும் அடிப்படையிலேயே பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ குற்றவாளியாக இனங்காணப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அத் தீர்ப்பினையே கேள்விக்குள்ளாக்கி தற்போது மீள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...