தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுள் மேலும் ஒருவர் வைத்தியசாலையில் … 

அனுராதபுரம் சிறையில் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுள் ஒருவரின்  உடல்நிலை மோசமடைந்த நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
இராபல்லவன் தபோரூபன் என்கின்ற  அரசியல் கைதியே  இவ்வாறு வைதியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
 தங்களுக்கு எதிராக, நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை துரிதமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு ,  அநுராதபுரம் மற்றும் மெகசின் சிறைச்சாலைகளில்  அரசியல் கைதிகள் 55  பேர்  உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றது,
இந்நிலையில்   ஐவர் சுகயீனமுற்றநிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக , சிறைக் கைதிகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை சுகயீனமுற்ற கைதிகள், சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லபட்டு சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர், மீண்டும் சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...