Designed by Iniyas LTD
மட்டக்களப்பில் ஆயுர்வேத மருந்து போன்று லேபலிடப்பட்ட போதை கலந்த லேகியம் பொலிஸாரால் பறிமுதல்..
மட்டக்களப்பு பூநொச்சிமுனையில் சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான போதை கலந்த 82 லேகியப்பக்கட்டுக்களை காதான்குடி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
நேற்று மாலை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் ஒரு வரை கைது செய்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பூநொச்சிமுனை தாறுஸ்ஸலாம் மைதானத்திற்கருகிலுள்ள வாகன கராஜ் ஒன்றிலேயே இந்த லேகியப் பக்கட்டுக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஆயுர்வேத மருந்து போன்று லேபலிடப்பட்டு குறித்த லேகியம் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
