தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிலாவத்துறை   கடற்படை முகாம் அகற்றப்பட்டு காணிகள் பொதுமக்களுக்கு கையளிக்கும் சாத்தியம் இல்லை..

மன்னார் சிலாவத்துறை   கடற்படை முகாம் அகற்றப்பட்டு காணிகள் பொதுமக்களுக்கு கையளிக்கும் சாத்தியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணிகள் விடுவிப்பு தொடர்பாக மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று கூட்டம் ஒன்று  நடைபெற்றது.

இதில்  சிலாவத்துறை கடற்படை முகாம் கண்காணிப்பின் கேந்திர நிலையமாக விளங்குவதாகவும், அங்கு  பொருத்தப்பட்டுள்ள மூன்று ரேடர்கள் அனைத்துப் பக்கங்களையும் கண்காணிக்க ஏதுவாக உள்ளதாகவும்   கடற்படையினர்  கூறியுள்ளனர்.

அவர்களின் இந்த நிலைப்பாட்டினால்   மக்களின்  காணிகளை விடுவிக்கும் எண்ணம்  கடற்படையினரிடம் இல்லை என்பது  புலனாகின்றமை குறிப்பிடத்தக்கது. .

Comments
Loading...