தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாதுகாப்புச் சுவர் எழுப்ப 8.6 பில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்க டிரம்ப் கோரிக்கை…

மெக்சிக்கோவில் பாதுகாப்புச் சுவர் எழுப்ப, 8.6 பில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்க வேண்டும் என அதிபர் டிரம்ப்  கோரிக்கை விடுக்க  உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை  மெக்சிக்கோ எல்லையில் பாதுகாப்புச் சுவர் எழுப்ப 5.7 பில்லியன் டாலர் நிதி ஒதுக்குவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஏற்கெனவே டிரம்ப் கேட்டிருந்தார்.

எனினும்  குடியரசுக் கட்சிக்கும், ஜனநாயகக் கட்சிக்கும் உடன்பாடு ஏற்படாததால், நிதி ஒதுக்கும் மசோதா நிறைவேறாமல், அரசுத்துறைகள் 35 நாட்கள் முடங்கியிருந்தன.

அதன் பின்னர் 1.37 பில்லியன் டாலர்கள் மட்டுமே ஒதுக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததால், டிரம்ப் நெருக்கடி நிலையை அறிவித்திருந்தார்.

இதனிடையே பாதுகாப்புச் சுவர் எழுப்ப 8.6 பில்லியன் டாலர்கள் நிதிஒதுக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என  டிரம்ப் கோரிக்கை விடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments
Loading...