தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சீனாவில் முதல் உள்நாட்டு ஜெட் விமானம் பறக்க தயார்!

சீனாவின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ஜெட் விமானம் பறக்கத் தயாராகிறது. 158 பேர் அமரக்கூடிய சி919 எனும் பெயர் கொண்ட இந்த விமானம் தனது சோதனை ஓட்டத்தை நடத்தியுள்ளது.

இந்த விமானத்தைத் தயாரித்ததன் மூலம் சீனா ஏற்கனவேயுள்ள அமெரிக்க, ஐரோப்பா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் நான்காவது நாடாக இணைந்துள்ளது. சுமார் 4,075 கி.மீ தூரம் பறக்கக்கூடிய இந்த விமானம் தற்போதுள்ள ஏர்பஸ் 320, போயிங் 737 ஆகியவற்றிற்கு இணையானதாக இருப்பதாக சீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சுமார் 2,00,000 தொழில்நுட்பவியலர் இத்திட்டத்தில் பணியாற்றியுள்ளனர்.

விமானத்தைத் தயாரிக்க உலகம் முழுவதும் தேவையான பொருட்களை சீனா தருவித்துள்ளது. இந்த விமானம் முழுமையாக தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும்போது வாங்குவதற்காக இப்போதே 570 விமானங்களுக்கான விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த விண்ணப்பங்களை உள்நாடு, வெளிநாட்டு 23 நிறுவனங்கள் விடுத்துள்ளன.

பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கின் கணிப்புப்படி சீனாவிற்கு அடுத்த இருபதாண்டுகளில் 6,810 விமானங்கள் தேவைப்படுகின்றன. இதற்கு சுமார் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும் என்று தெரிகிறது.

விமானத்தின் முதல் பயணம் ஏப்ரல் 29 ஆம் தேதியன்று நடந்தேறியது. ஷாங்காய் விமான நிலையத்திலிருந்து அதன் முதல் பயணத்தை அது துவங்கியது.

 

Comments
Loading...