தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விண்வெளியில் 186 நாட்கள் ஆய்விற்குப்பின் பத்திரமாக தரையிறங்கிய விஞ்ஞானிகள்!

ClN50CDWQAAVs13சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து மூன்று விஞ்ஞானிகள் இன்று பத்திரமாக தரையிறங்கினர்.

அமெரிக்க, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையம் அமைத்து ஆய்வு செய்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த 3 விஞ்ஞானிகள் கடந்த 186 நாட்கள் விண்வெளி மையத்தில் தங்கி ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் ஆய்விற்குப் பிறகு மூன்று விஞ்ஞானிகளும் இன்று ரஷ்யாவின் சோயூஸ் டிஎம்ஏ என்ற விண்கலம் மூலம் கஜகஸ்தானில் பத்திரமாக தரையிரறங்கினர். அவர்கள் வந்த விண்கலம் மூன்று மணி நேரத்தில் தரையை அடைந்ததாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

Comments
Loading...