தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சீனா செல்லவுள்ள ரணில்

எதிர்வரும் 6ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இதற்கான முன்னேற்பாடுகளைக் கவனிக்க வெளிவிவகார அமைச்சிலிருந்து முக்கிய அதிகாரியொருவர் பீஜிங் பயணமாகியுள்ளார்.ranil

இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 6ஆம் திகதி சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார். பிரதமரின் இந்தப் பயணத்தின்போது பல்வேறு பட்ட முக்கிய உடன்பாடுகள் செய்துகொள்ளப்பட விருப்பதால் அவரின் இந்தப் பயணமானது இரண்டு நாடுகளாலும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவே வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் சீனா பயணமாகியுள்ளார். இந்த அதிகாரி முன்னாள் இலங்கைக்கான சீனத் தூதுவராகக் கடமையாற்றியவர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Comments
Loading...